ஒவ்வொரு வெள்ளி அன்றும் ஆவையின் மிக முக்கிய செய்திகள் வாரம் தோறும் துபையிலிருந்து கடல் கடந்து அனுப்பும் உன்னத சேவையை பெரும் தன்மையுடன் உங்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் . தங்களின் பேராதரவை வாரி வழங்கிடுமாறு கேட்டுகொள்கிறோம் இதற்கு நீங்கள் கைமாறு செய்ய விரும்பினால் பருப்பு ஆனம் காயிச்சி, பப்புடு ,முருக்கு, நெத்திலி கருவாடு வறுத்து, கொடுத்தனுப்புங்கள் , முக்கியமாக வியாழன் இரவு கிடைக்குமாறு அனுப்பவும் , அப்ப்போளுதுதான் நாங்கள் சாப்பிட்டு புர்ஜி கலிபா டவர் போல் உயரலாம் .போன வாரம் ஆவையில் உள்ள மிக முக்கிய தொழில் அதிபர்களை தாக்கி உண்மைகளை போட்டு உடைத்ததற்காக எங்களை நீங்கள் மன்னிக்கவே கூடாது ,இதற்க்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் . அது ஆங்கிலம் அரபு , ஹிந்தி , மலயாளம் எந்த பாடமாக இருந்தாலும் சரி கணக்கு பாடமாக மட்டும் இருக்ககூடாது , உங்களது ஆதரவும் உற்சாகமும் எங்களை மேன்மேலும் இது போன்ற சேவைகளை தொடர்ந்து செய்ய உதவி களாக இருக்கும் ,
www.aavai.co.cc தொடர்ந்து பாருங்கள் அத்தியாவசிய செய்திகளை அறிந்துகொள்ளுங்கள் .
---------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த வார கலாட்டா
ஒரு சின்ன கதை :
ஒரு சிங்கம் , ஒரு புலி, ஒரு குரங்கு
சிங்கம் டாக்டருக்கு படிக்குது ,
புலி வக்கிலுக்கு படிக்குது ,குரங்கு இந்த கதையை படிக்குது !!!!
(உங்கள் முகம் சிவப்பது தெரிகிறது !!! இருந்தாலும் எங்களை ஒன்னும் பண்ண முடியாது !!!)
-------------------------------------------------------------------------
கர்நாடகா தண்ணீரும்,
கேர்ள்'சின் கண்ணீரும் ஒண்ணுதான்...
ரெண்டுமே கொஞ்சமாத்தான் வரும்...
ஆனா பல பிரச்சனைய கொண்டு வரும்..
வாட்டர் டேன்க் மேல படுத்து யோசிப்போர் சங்கம்.....
-----------------------------------------------------------------------------------------------------------------------
இந்த வாரம் நம்ம ஊரு நியூஸ்
இந்த மாத கடைசியில் கந்துரி சோறு கொடுக்க இருப்பதால் , ஊருக்கு வருபவர்கள் உடனே டிக்கெட் போட்டு ஊருக்கு வரவும் , வரும்போது கண்டிப்பாக Duty free இல் பூ வாலி வங்கி வரவும் , ( தாளிச்சாவும் தருகிறார்களாம் !! )
இந்த சந்தர்பத்தை நழுவ விடாதிர்கள் !!!
மீண்டும் அடுத்த வாரம் ....