Friday, January 28, 2011

engalai pattri

ஒவ்வொரு வெள்ளி அன்றும் ஆவையின் மிக முக்கிய செய்திகள் வாரம் தோறும் துபையிலிருந்து  கடல் கடந்து அனுப்பும் உன்னத சேவையை பெரும் தன்மையுடன் உங்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் . தங்களின் பேராதரவை வாரி வழங்கிடுமாறு கேட்டுகொள்கிறோம் இதற்கு நீங்கள் கைமாறு செய்ய  விரும்பினால் பருப்பு ஆனம் காயிச்சி, பப்புடு ,முருக்கு, நெத்திலி கருவாடு வறுத்து, கொடுத்தனுப்புங்கள் , முக்கியமாக வியாழன் இரவு கிடைக்குமாறு அனுப்பவும் , அப்ப்போளுதுதான் நாங்கள் சாப்பிட்டு புர்ஜி  கலிபா டவர்  போல் உயரலாம் .


போன வாரம் ஆவையில் உள்ள மிக முக்கிய தொழில் அதிபர்களை தாக்கி உண்மைகளை போட்டு உடைத்ததற்காக எங்களை நீங்கள் மன்னிக்கவே கூடாது ,இதற்க்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் .  அது ஆங்கிலம் அரபு , ஹிந்தி ,  மலயாளம் எந்த பாடமாக இருந்தாலும் சரி கணக்கு பாடமாக மட்டும் இருக்ககூடாது , உங்களது ஆதரவும் உற்சாகமும் எங்களை மேன்மேலும் இது போன்ற சேவைகளை தொடர்ந்து செய்ய உதவி களாக இருக்கும் ,


www.aavai.co.cc தொடர்ந்து பாருங்கள் அத்தியாவசிய செய்திகளை அறிந்துகொள்ளுங்கள் .
---------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வார கலாட்டா 


ஒரு சின்ன கதை :
ஒரு சிங்கம் , ஒரு புலி, ஒரு குரங்கு 
சிங்கம் டாக்டருக்கு படிக்குது ,
புலி வக்கிலுக்கு படிக்குது ,
குரங்கு இந்த கதையை படிக்குது !!!!


(உங்கள் முகம் சிவப்பது தெரிகிறது !!! இருந்தாலும் எங்களை ஒன்னும் பண்ண முடியாது !!!) 
-------------------------------------------------------------------------


கர்நாடகா தண்ணீரும்,
கேர்ள்'சின் கண்ணீரும் ஒண்ணுதான்...

ரெண்டுமே கொஞ்சமாத்தான் வரும்...
 ஆனா பல பிரச்சனைய கொண்டு வரும்..



 வாட்டர் டேன்க் மேல படுத்து யோசிப்போர் சங்கம்.....

-----------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வாரம் நம்ம ஊரு நியூஸ் 
  
இந்த மாத கடைசியில் கந்துரி சோறு கொடுக்க இருப்பதால் , ஊருக்கு வருபவர்கள் உடனே டிக்கெட் போட்டு ஊருக்கு வரவும் , வரும்போது கண்டிப்பாக Duty free இல் பூ வாலி வங்கி வரவும் , ( தாளிச்சாவும்  தருகிறார்களாம் !!  ) 


இந்த சந்தர்பத்தை நழுவ விடாதிர்கள் !!!




மீண்டும் அடுத்த வாரம் .... 

Sunday, January 23, 2011

namma oru news

இந்த வாரம் .....


ஆவணியாபுரத்தில் ஓர் புதிய உதயம்


முஹபத் செல் கேர் & cabs


கப்பல் பவா தர்ஹா எதிரில் ( தர்ஹா மார்கெட் )


எங்களிடம் சார்ஜ் நிக்காத பேட்டரிகள், அமௌன்ட் ஏறாத ரீசார்ஜ் சிறந்த முறையில் தருகிறோம் ...  
அனைவரும் வாரீர்!!  ஆதரவு தாரீர் !!
 ஆவணியாபுரம்


மக்கள் சேவையில் 
உங்களின்
ஷிபா மெடிக்கல்ஸ்
ஆவணியாபுரம்  
(ஒரு மருந்து!  ஒரே மருந்து !! )




 மந்தரம் ஹைதர் அலி கடையில்
சூடான பீசா , பர்கர் , கபாப் , ஸ்ப்ரிங் ரோல் , மசால் வடை , பஜ்ஜி , புரோட்டா 5 ஸ்டார் தரத்தில் கிடைக்கும். 




சவ்ந்தர்ராஜ் சலூனில் கட்டிங்க்கு சேவிங் இலவசம் 
இச் சலுகை குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும்.
எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது ( நரைமுடி அணுகக்கூடாது )


பைஜமா கடையில் ISI முத்திரை பெற்ற கப்சி, ஆசா மிட்டாய் , திருநெல்வேலி திருட்டு கடை அல்வா , முராரி மைஸூர் பாக்கு, முந்திரி மிக்ஸ்செர், பாதம் கீர், ரசனா , சுரப்பான வாழைபழம் கிடைக்கும்.  கண்டிபாக  கடன் கிடையாது .
போதை பொருளுக்கு லோன் உண்டு .


மூவேந்தர் ரியல் எஸ்டேட் - ஆவணியாபுரம் 
ஈ சி ஆர் -இல் மனைகள் வாங்க, விற்க !!
மனை உரிமையாளருக்கே தெரியாமல் விற்று தருகிறோம் . ?  ?  ?


துபாய் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்கும் 
தக்காளி ரியாஸ்(கணக்கு பிள்ளை) , செஉட்டு சாகுல் , அவுட்டு கால் ரியாஜி , கபாலிகான் உஸ்மான் , நண்டு யாசின் , பைஜி தௌபிக் ,  பூந்தி  ரபி அஹமது, 
அப்பாடி மகாதிர் , பேச்சாளர் வாசிம் , அரங்காவல்  டாக்டர் ஜியாயுதின், , ஆக்க அசன் , மக்கள் தொண்டர் ஹாஜா மாலிக் , சொக்க தங்கம் சேக் மற்றும் விடுப்பட்ட நண்பர்கள் 
துபாய் புர்ஜுள் அரப் டவர் போல் உயர்ந்து நிற்கும் உங்களை மனமார வாழ்த்துகிறோம்  
இப்படிக்கு 


விசா வருகைக்கு காத்திருக்கும் வருத்தபடாத வாலிபர் சங்கம் 
 கேம்ப் : ஆவை .


அடுத்த வாரம் தொடரும் .....